நா பிறழ் சொற்கள் | Tongue Twisters in Tamil

" TIT யின் "

"மொழி தின் வளர்த்தல்"

 

 "தமிழ் வழி கல்வி"


 நா பிறழ் சொற்கள் | Tongue Twisters in Tamil

Tamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி.








  • பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

  • கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

  • ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிறைய  மயிர்
  • வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.

  • கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.

  • கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்

  • கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது

  • யார் தச்ச சட்டை  எங்க தாத்தா தச்ச சட்டை

  • ப்ளூ லாரி உருளுது பிரளுது.

  • காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
            காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா

  • பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.

  • ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை  தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.

  • கரி படுக்க பரி மட்டம்
          கனி பழுக்க கிளி கொத்தும் 
  • மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
          பெய்யா மெய்யா மழை 
  • உளி பெருகு சிலை அழகு
         அலை உலவு கடல் அழகு 
  • கார் சீற நீர் சீறும்
          ஏர் கீற வேர் கீறும் 
  • கோரைப் புல்லில் சாரை
          கீரி பார்த்து சீறும் 


  •  தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.

  •  சேத்துக்குள்ள சின்னப் புள்ள  தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு !!!  

  •   அவள் அவலளந்தால் இவள் அவலளப்பாள்  இவள் அவலளந்தால் அவள்  அவலளப்பாள்    அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால்   எவள் அவலப்பாள் ?

  • குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகி கீழே விழுந்தது.

  • திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்"

  • துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை

  • கரடி  கருங்கரடி ,கரடி  பொடனி  கரும்  பொடனி 

  • நம்ம  தோசை  நல்ல  தோசை  தச்சன்  தோசை  தீஞ்ச  தோசை 

  • நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்.

  •  வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்!

  • நாளும் கிழமையும் விழுப்புரத்தில் விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்.

  • அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை மயிர்.

  • ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை 

  • தாழை ஓலை நிழல் .

  • பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!

  •  வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்! 

  • சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை!

  • கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.

*திக்குவாயை எதிர் கொள்ள எளிய வழி.
  Easy way to overcome stammering.

Below song (முத்தைத்தரு பத்தித் திருநகை) is the super tongue twister, by reciting it frequently a person can overcome from stammering and they can able to speak fluently and uninterruptedly.


திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள், Muthai tharu pathi song lyrics, beautiful song.

திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ……
தனதான.. . ..

பாடல் வரிகள்

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

************************************************************

You Can share this information with your contacts on this remarkable day.


Regards,
S.A Sanjana
Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see Universally,”
Whats App no- 👉 8681095579.

OUR
WEBSITE: 👉 shorturl.at/dgtY5
YOUTUBE: 👉 shorturl.at/jMRZ7


👉 Home Page



"ஒளியாய் ஒளிர்வோம்"


" Let's Shine like a Light "


Comments

  1. it's very interested semma Joly ya eruku thanks to talet infinite talents team

    ReplyDelete
  2. I want a talent intent talent books can you send me koreyar and i want south Korea ticket

    ReplyDelete

Post a Comment