20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள்
" TIT யின் " "தமிழ் வழி கல்வி" 20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள் 1. அதிகாரம் : 8 - அன்புடைமை குறள் : 72 திருக்குறள்: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் -அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு பொருள்: அன்பு இல்லாதவர் தான் காணும் எல்லாவற்றையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவர் அன்பு உடையவரோ தனக்கு சொந்தமானதையும் பிறர்க்கு உரியதாக்குவார். 2. அதிகாரம் : 10 - இனியவை கூறல் குறள் : 100 திருக்குறள்: இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந் தற்று பொருள்: செவிக்கும் மனதுக்கும் இன்பம் தரும் வகையில் இனிப்பான சொற்கள் நம் மொழியிலே இருக்கும் பொழுது தீய சொற்களை பேசுவது என்பது நல்ல கனிந்த பழத்தினை விட்டுவிட்டு காயை கடும் காயை உண்பதற்கு ஒப்பாகும். 3. அதிகாரம் : 11 - செய்நன்றி அறிதல் குறள் : 110 திருக்குறள்: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. பொருள்: இந்த உலகில் எத்தகைய அறத்தை அழித்தவர்கள...