20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள்

 

" TIT யின் "

"தமிழ் வழி கல்வி"


20 எளிமையான திருக்குறள்கள் 

மற்றும் அதன் விளக்கங்கள்




1.

அதிகாரம் : 8 - அன்புடைமை
குறள்       ‌‌‌‌‌: 72  
‌திருக்குறள்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்        -அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு

பொருள்:

அன்பு இல்லாதவர் தான் காணும் எல்லாவற்றையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவர் அன்பு உடையவரோ தனக்கு சொந்தமானதையும் பிறர்க்கு உரியதாக்குவார்.


2.

அதிகாரம் : 10 - இனியவை கூறல்
குறள் ‌‌:   100
‌திருக்குறள்: 

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனியிருப்ப காய்கவர்ந் தற்று

பொருள்:

செவிக்கும் மனதுக்கும் இன்பம் தரும் வகையில் இனிப்பான சொற்கள் நம் மொழியிலே இருக்கும் பொழுது தீய சொற்களை பேசுவது என்பது நல்ல கனிந்த பழத்தினை விட்டுவிட்டு காயை கடும் காயை உண்பதற்கு ஒப்பாகும்.


3.

அதிகாரம் : 11 - செய்நன்றி அறிதல்
குறள் ‌‌:     110
‌திருக்குறள்: 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்:

இந்த உலகில் எத்தகைய அறத்தை அழித்தவர்களுக்கும் அதிலிருந்து வெளிப்படவும் வழி இருக்கிறது ஆனால் ஒருவர் நமக்கு செய்த உதவியை மறந்தவனுக்கு அதிலிருந்து விடுபட வழி என்பதே இல்லை.

4.

அதிகாரம்: 13 - அடக்கம் உடைமை
குறள் :  129

திருக்குறள்:

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு

பொருள்:

எரியும் நெருப்பினால் காயப்பட்டாலும் அது மனதினுள் ஆறிவிடும் ஆனால் ஒருவரின் நாவினால் தீய சொற்களை கேட்டு ரணமாகிய மனதின் வடுவானது எக்காலத்திலும் மறையாது.

5.
அதிகாரம்: 14 - ஒழுக்கம் உடைமை
குறள் : 138
திருக்குறள்:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் -தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்

பொருள்:

நல்ல ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வந்தால் அதை நமக்கு நன்மையை தரும் அதை விடுத்து தீய ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் அவை துன்பத்தையே கொடுக்கும்.


6.
அதிகாரம்: 16 - பொறை உடைமை
குறள் :  152

திருக்குறள்:

பொறுத்தல் இறப்பினை என்றும் -அதனை 
மறத்தல் அதனினும் நன்று


பொருள்:

பிறர் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்வது என்பது சிறந்த பண்பாகும் ஆனால் அதனை விடவும் அந்த தீமையையும் தீமை செய்தவரையும் மறப்பது என்பது மேலும் நன்மை பயக்கும்.

7.

அதிகாரம்: 30 - வாய்மை
குறள் :  293

திருக்குறள்:

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க -பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னை சுடும்

பொருள்:

தன் மனதிற்கும் மனசாட்சிக்கும் தெரிந்து ஒருவன் பொய் பேசினால்  அவனது நெஞ்சே அதாவது அவனுடைய மனசாட்சியே அவனை சுடும்


8.
அதிகாரம்: 40 - கல்வி
குறள் :  391

திருக்குறள்:

கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக

பொருள்:

கற்க வேண்டிய அற நூல்களை தெளிவாக கற்று அந்நூலின் நெறிப்படி வாழுதில் அறமாகும்.


9.
அதிகாரம்: 42 - கேள்வி
குறள் : 411

திருக்குறள்:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் -அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை

பொருள்:

செல்வங்களில் எல்லாம் சிறந்ததும் உயர்ந்ததும் கேள்விச் செல்வமே.


10.

அதிகாரம்: 43- அறிவு உடைமை
குறள் :  423

திருக்குறள்:

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் -அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருள்;

ஒரு பொருளை யார் யார் வழியாக கேட்டாலும் அப்பொருளின் உண்மை தன்மையை உணர்வதே அறிவாகும்.


11.
அதிகாரம்: 43 -அறிவுடைமை
குறள் :  428

திருக்குறள்:

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்

பொருள்:

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சா திருத்தல் மடத்தன்மையாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மையாகும்.


12.
அதிகாரம்: 43 - அறிவுடைமை
குறள் :  430

திருக்குறள்:

அறிவுடையார் எல்லாம் உடையார் -அறிவிலார் 
என்னுடைய ரேனும் இலர்

பொருள்:

அறிவுடையவர்கள் தம் அறிவினாலே எல்லாம் உடையவராக கருதப்படுவார்கள். அறிவில்லாதவர்க்கு எது இருந்தும் எல்லாம் இருந்தும் அவர் இல்லாதவரே.


13.

அதிகாரம்: 45 - பெரியோரை துணைக்கோடல்
குறள் : 448

திருக்குறள்:

இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன் 
கெடுப்பார் இலானும் கெடும்.

பொருள்:

செய்யும் தவறுகளை இடித்து உரைக்கும் சான்றோர்களோ அல்லது பெரியவர்களோ இல்லாத மன்னன் ஆயினும் தனிமனிதனாயினும் பகைவன் என ஒருவன் இல்லாமலே தானாகவே கெடுவான்.


14.
அதிகாரம்: 49 - காலம் அறிதல்
குறள் : 485

திருக்குறள்:

காலம் கருதி இருப்பர்; கலங்காது 
ஞாலம் கருது பவர்

பொருள்:
உலகத்தையே ஆழ நினைப்பவர் அதற்கான தக்க தருணம் வரும் வரை அதைஎதிர்பார்த்து சோர்வின்றி காத்திருப்பர்.

15.
அதிகாரம் :51 - தெரிந்து தெளிதல்
குறள் : 504
திருக்குறள்:

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்:
ஒருவரின் நல்ல குணங்களையும் அவரின் கெட்ட குற்றங்களையும் அளவிட்டு பார்த்து அவற்றில் எது மிகுதியோ அவற்றை வைத்தே அவரை அறிய வேண்டும்.

16.
அதிகாரம் : 67 - வினைத்திட்பம்
குறள் : 664

திருக்குறள்:

சொல்லுதல் யார்க்கும் எளிய -அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்

பொருள்:
நான் அதை செய்தேன் இதை செய்வேன் என்று சொல்லுதல் எல்லோருக்கும் எளிது தான் ஆனால் சொல்ல சொன்ன படி நிறைவேற்றுதல் என்பது அறிய செயலாகும்.


17.
அதிகாரம்: 79 - நட்பு
குறள் : 786
திருக்குறள்:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.

பொருள்:

முகங்கள் மட்டும் மலரும்படி ஒருவருடன் நட்புக் கொள்வது என்பது உண்மையான நட்பு ஆகாது அன்பால் உள்ளமும் மலரும் படி நட்புக் கொள்வதே உண்மையான நட்பு ஆகும்.


18.
அதிகாரம் : 79 - நட்பு
குறள்: 788
திருக்குறள்:

உடுக்கை இழந்தவன் கைபோல -ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள்:

ஆடைகள் கலைந்த பொழுது அதை சரி செய்ய தனது கைவிரல் ஆனது விரைவது போல நண்பர்களுக்கு ஒரு துன்பம் வரும் வேளையில் அவற்றை விரைந்து தடுக்க வேண்டும்.


9.
அதிகாரம் : 104 - உழவு 
குறள் : 1034

திருக்குறள்:

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை

பொருள்:

மக்கள் பல தொழில் சிறந்து இருந்தாலும் உணவிற்காக இறுதியாக அவர்கள் நாடுவது உழவுத் தொழில் ஒன்றையே எனவே இந்த உலகத்தில் உழவே முதன்மையானது.

20.
அதிகாரம் : 1- கடவுள் வாழ்த்து
குறள் : 1
திருக்குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

பொருள்:

எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாவது போல இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் இறைவன் முதன்மையானவராவார்.


50 எளிமையான திருக்குறள்கள்.




திருக்குறள்

" TIT யின் " வாரம் இரு திருக்குறள் அதிகாரம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மற்றும் திருக்குறளுக்கான விளக்கவுரை. (TAMIL & ENGLISH)
மணக்குடவர், பரிமேலழகர், மு. வரதராசன், கலைஞர், சாலமன் பாப்பையா, G.U. Pope ஆகியோர் எழுதிய உரை.

Explanation of Thirukkural Written by Thiruvalluvar.
Translation & Explanation BY G.U. Pope in English.


Share this article link with your friends and relatives if you like it.


**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இப்படிக்கு,
ச.அ. சன்சனா.

Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”
OUR
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com

TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1



"ஒளியாய் ஒளிர்வோம்"
" Let's Shine like a Light "







Comments