சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்.
👉 Click Here to Know " How to Translate and Read this page in 100+ World Languages !!. " " TIT யின் " "ஆரோக்கிய வாழ்வு" சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!! Home Remedies for Cough and Cold !! ச ளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி? உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல் தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். இஞ்சி இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்க...