தாவரத்தின் அடி வகைகள்
தாவரத்தின் அடி வகைகள் - Base types of the plant in Tamil Language
தாவரத்தின் அடி வகைகள்
தாவர அடி பெயர்கள் - Plant foot names in Tamil Language
- தாள்: நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
- தண்டு: கீரை, வாழை முதலியவற்றின் அடி;
- கோல்: நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
- தூறு:குத்துச்செடி,புதர் முதலியவற்றின்அடி
- தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
- கழி : கரும்பின் அடி
- கழை மூங்கிலின் அடி
- அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி
காய்ந்த அடியும் கிளையும்
தாவரங்களின் கிளைப்பிரிவுகள்
காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்.
- சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி);
- விறகு: காய்ந்த சிறுகிளை;
- வெங்கழி: காய்ந்த கழி;
- கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.
சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
Comments
Post a Comment