தாவரத்தின் பிஞ்சு வகைகள்

 

தாவரத்தின் பிஞ்சு வகைகள், Pinch varieties of the plant in Tamil Language


தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சி்றப்பாகும். சான்றாக,ஒரு தாவரத்தின் பிஞ்சு வகையை குறிப்பதற்கான சொற்களுக்குத் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.

ஒரு தாவரத்தின் பிஞ்சு வகைகள்

தாவர பிஞ்சு பெயர்கள் - Plant pinch names in Tamil Language

  • பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு:
  • பிஞ்சு: இளம் காய்;
  • வடு: மாம்பிஞ்சு:
  • மூசு: பலாப்பிஞ்சு;
  • கவ்வை: எள்பிஞ்சு:
  • குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு;
  • முட்டுக் குரும்பை: சிறு குரும்பை;
  • இளநீர்: முற்றாத தேங்காய் :
  • நுழாய்: இளம்பாக்கு:
  • கருக்கல்: இளநெல்:
  • கச்சல்: வாழைப்பிஞ்சு.
தாவரத்தின் பிஞ்சு வகைகள்

சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். "தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).





"ஒளியாய் ஒளிர்வோம்"


" Let's Shine like a Light "




Comments