Moral Short Stories in Tamil- தமிழில் சிறுகதைகள்- உயிரைக் காத்த உண்மை -5

 


Moral Short Story in Tamil
தமிழில் சிறுகதைகள்

5. உயிரைக் காத்த உண்மை.






நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவ சாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங் களை வைத்தான்.

ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன. அவற் றைப் பிடித்த விவசாயி முதலில் முயலி டம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான்.

அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன்.

இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியி டம் கேட்டான்.

அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான்.

அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது.

மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப் புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான்.

Moral of Short Story in Tamil – நீதி : உண்மை நிச்சயம் வெல்லும்.

Share this article link with your friends and relatives if you like it.

By 
S.A.Sanjana
Talents Infinite Talents.





"ஒளியாய் ஒளிர்வோம்"


" Let's Shine like a Light "


Comments