Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள்- அடிமையானக் குதிரை -2
Moral Short Story in Tamil
தமிழில் சிறுகதைகள்
2. அடிமையானக் குதிரை– Short Story in Tamil
ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது.
அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான்.
தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது.
தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது. குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது.
நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகை யால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான்.
அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று.
Moral of Short Story in Tamil – நீதி : பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.
"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு." --குறள் 204:
மு.வரதராசன் விளக்கம்:
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
Comments
Post a Comment