Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள்- அழகின் ஆபத்து -3
Moral Short Story in Tamil
தமிழில் சிறுகதைகள்
3.அழகின் ஆபத்து – Short Story in Tamil
ஒரு நாள் கலைமான் ஒன்று தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக நீர் நிலைக்கு வந்தது. நீரை அருந்தும் போது நீரில் தெரியும் தன் கொம்புகளின் நிழலைக் கண்டு பெருமிதம் அடைந்தது.
ஆஹா! என் தலையில் உள்ள கொம்புகள் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் என் குச்சிக் கால்கள் என் அழகைக் கெடுக்கின்றது என்று நினைத்தது.
தன் அழகிற்கு ஏற்ற கால்கள் இல்லாததை எண்ணி தனக்குத்தானே வருந்தி யது.
அந்த வேளையில் ஒரு சிங்கம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது.
சிங்கம் துரத்திக் கொண்டே சென்றது. வேகமாக ஓடும்போது மானின் கொம்புகள் செடி, கொடி களில் மாட்டிக் கொண்டு விடவே,
மானால் வேகமாக ஓடமுடியாமல் அச் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டது. அப் போதுதான் மானிற்குப் புரிந்தது.
என் உயிரைக் காக்க உதவும் என் கால்களைப் பழித்தேன். எனக்கு எமனாக இருந்த என் கொம்புகளை புகழ்ந்தேன்.
நன்றி மறந்த எனக்கு இது சரியான தண்டனை என்று கூறி வருந்தியபடி தன் உயிரை விட்டது.
Moral of Short Story in Tamil – நீதி: அழகு ஆபத்து.
Comments
Post a Comment