Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் -உதவிக்குக் கிடைத்தப் பரிசு - 4
Moral Short Story in Tamil
தமிழில் சிறுகதைகள்
4.உதவிக்குக் கிடைத்தப் பரிசு– Short Story in Tamil
ஒரு நாள் பாம்பு ஒன்று குளிர் காலப் பனியில் விரைத்து சுருண்டு கிடந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியானவன் அப்பாம்பிற்கு உதவ நினைத்து அப்பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியானவன் மார்பைப் பலமாகக் கடித்தது.
பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான்.
குடியானவன் அப்பாம்பைப் பார்த்து உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்ததற்கு எனக்கு மிகச்சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்றான்.
Moral of Short Story in Tamil – நீதி : கேட்காமல் செய்யும் உதவி, ஒரு சமயம் உனக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
Comments
Post a Comment