கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.

"தமிழ் வழி கல்வி"

**You can read this and all other articles of our website in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website. (check the bottom page for how to do this  screenshots).


  " TIT யின் "

"ஆரோக்கிய வாழ்வு"

இந்த தலைப்பில் வாரம் ஒரு சில ஆரோக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்.

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான உடல்நலத்தையும், சிறந்த மனவளத்தையும் தான்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்."


கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால்

 ஏற்படும்  நன்மைகள், தீமைகள்.



தினமும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிடுங்க... இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கறப்போ சாப்பிடாம இருக்கலாமா


  • பித்தப்பைக் கல் கரைக்கும், மாதவிடாய்க் கோளாறு நீக்கும்... கருஞ்சீரகம்!


இந்திய உணவுமுறை, மிகவும் மருத்துவ பயன்களை கொண்டதாக விளங்கி வருகிறது. இந்திய உணவு வகைகளில், கருஞ்சீரகம் இல்லாமல், எந்த உணவு வகைகளும் சமைக்கப்படுவது இல்லை. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருஞ்சீரக விதைகளை ஏற்படுவதால் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

ருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.
கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் பென்னல் பிளவர் என்று அழைக்கிறோம். பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என அவற்றின் சுவைகளை வைத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை, வறுத்தோ அல்லது வறுக்காமலேயா நாம் நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.
இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது. 
  • மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள்,  வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. 
  • சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  • மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். 
  • தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். 
  • மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். 
  • பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். 
பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

​கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.


​நினைவுத்திறனை மேம்படுத்துகிறது

கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​நீரிழிவை தடுக்கிறது

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.

​இதய பராமரிப்பிற்கு நல்லது

கருஞ்சீரக விதைகள், இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில், கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தை, பாலில் கலந்து குடித்தால், நல்ல பலனை பெறலாம்.

​வீக்கத்தை குறைக்கிறது

கருஞ்சீரக விதைகளில், ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

​இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

கருஞ்சீரக எண்ணெய், நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாவண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

​பற்களின் வலிமைக்கு உதவுகிறது

கருஞ்சீரகம், பற்கள் மட்டுமல்லாது,ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. பல் வலிக்கு உடனடி தீர்வாக கருஞ்சீரகம் விளங்குகிறது. வாய் சம்பந்தமான பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை, ஒரு கப் தயிரில் கலந்து அதை தினமும் இரண்டு முறை, ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

​ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது

நவநாகரீக உலகில் ஏற்பட்டுள்ள அதீத மாசுவின் காரணமாக, ஆஸ்துமா என்பது தற்போது சாதாரணமாக எல்லாருக்கும் வரும் குறைபாடாக மாறிவிட்டது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, கருஞ்சீரக மருத்துவம், இனிய வரப்பிரசாதமாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில், கருஞசீரக எண்ணெய் மற்றும் தேன் கலந்து குடித்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.

​உடல் எடையை குறைக்க உதவுகிறது

கருஞ்சீரகம், நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, நாம் சிக் ஆகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர , உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.

​தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு

சருமம் மற்றும் முடிகளின் பராமரிப்பிற்கு, கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயை, எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.

கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள், முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.

​சிறுநீரகத்தை பராமரிக்கிறது

நீரிழிவு காரணமாக, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய,கருஞ்சீரகம் பெரிதும் துணைபுரிகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில், யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சீறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது.

​புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உடலில் உள்ள புற்றுநோயை உருவாக்கும் ப்ரீ ரேடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. மார்பக புற்றுநோய், செர்விகல் கேன்சர், நுரையீரல் புற்றுநோய், பான்கிரியாட்டிக் புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

​தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது

இன்றைய இளைய தலைமுறையினர், தலைவலி உள்ளிட்டவைகளால் அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளை காட்டிலும், இயற்கை மருத்துவம், அவர்களுக்கு சிறந்த பயனை அளித்து வருகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள்,கருஞ்சீரக எண்ணெயை, முன்தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

​கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பிற நன்மைகள்

  • மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறது
  • மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது
  • உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது
  • வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.


கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து இரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை. அதிகப்படியான கருஞ்சீரக நுகர்வு இரத்தபோக்கு கோளாறுகளை மேலும் மோசமாக்கும். நீரிழிவு இருப்பவர்கள் மருந்துகளோடு கருஞ்சீரக விதைகளை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது அது திடீரென்று இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிட செய்யும்.

*The information given above is a collection of information and you need to cross-check with the naturopathy doctor before taking it.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - (942)
முன் உண்டது செரித்ததைத் தெளியஅறிந்து பின் உண்டால் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை எனச் சொல்கிறது.

அதிகாரத்தலைப்பு 'மருந்து' என்றாலும் மருந்து வேண்டாத வாழ்வையே வற்புறுத்துகின்றார் வள்ளுவர். அதை வெளிப்படையாகவே 'மருந்தென ஒன்று வேண்டாம்' என்று தெளிவுபடுத்துகிறார்.

****You can read this and all other articles in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website.


Share this article link with your friends and relatives if you like it.
**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

By 
Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,” 



"ஒளியாய் ஒளிர்வோம்"


" Let's Shine like a Light "

Comments