கரிசலாங்கண்ணி கீரை வழங்கும் கணக்கற்ற நன்மைகள்.


"தமிழ் வழி கல்வி"

**You can read this and all other articles of our website in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website. (check the bottom page for how to do this  screenshots).


  " TIT யின் "

"ஆரோக்கிய வாழ்வு"

இந்த தலைப்பில் வாரம் ஒரு சில ஆரோக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்.

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான உடல்நலத்தையும், சிறந்த மனவளத்தையும் தான்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்."



2.கரிசலாங்கண்ணி கீரை வழங்கும் கணக்கற்ற நன்மைகள் 

(Karisalankanni Keerai Benefits in Tamil)

கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றியும், அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.







‘உணவே மருந்து!’ என்ற சொல்லாடல் நமது பாரம்பரியத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் எதை உண்கிறோமோ அதுதான் நமது உடலாக மாறி, நம்மை ஜீவிக்க வைக்கிறது. அந்த வகையில் பல அரிய மூலிகைச் செடிகள் நம் பாரம்பரியத்தில் சித்தர்களாலும் யோகிகளாலும் கண்டறியப்பட்டு, அன்றாட வாழ்வில் உணவாகவே இருந்து வந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புத தாவரம்தான் கரிசலாங்கண்ணி கீரை. 

இந்த கீரைக்கு கரிசாலை, பிருங்கராஜம், தேகராஜம் அப்படின்னு வேறு சில பெயர்களும் இருக்கு. ஆஸ்டியேசி குடும்பத்தை சேர்ந்து.

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றி வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள் மிக உயர்வாக கூறுகிறார். உரைநடையாக அமைந்துள்ள இவரது 6ஆம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகளின் சிறப்புகளை அனைவரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளமுடியும். இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நுரையீரல் சளியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை நீக்கவல்லது. மஞ்சள் கரிசலாங்கண்ணி பொன் நிறத்தில் பூக்கும் மஞ்சள் நிற பூவின் காரணமாக “பொற்றலை கையாந்தகறை” எனும் பெயரில் இன்றும் ஊர்ப்புறங்களில் அழைக்கப்படுவதைக் காணலாம்!

கரிசலாங்கண்ணி வகைகள்:

வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என பூக்களின் நிறங்களின் அடிப்படையில் நான்கு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் இருந்துவந்துள்ளன. இதில் வெள்ளைக் கரிசலாங்கண்ணியை நாம் வர்ப்போரங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் எளிதில் பார்க்கலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணியை பார்ப்பது சற்று அரிது. சிவப்பு மற்றும் நீல பூப்பூக்கும் கரிசலாங்கண்ணி செடிகள் கிட்டத் தட்ட அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 கரிசலாங்கண்ணியில் பாஸ்பரஸ் சத்து நிறைந்து காணப்படுகிறது. நம் முன்னோர்கள் கரிசலாங்கண்ணி இலையை காயவைத்து பொடியாக்கி பல் துலக்குவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். நம் அன்றாட உணவில் துவையலாக, கடைசலாக, பொறியலாக இருந்துவந்த இத்தகைய கீரை வகைகள், இன்று மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

விதை மூலமாக அல்லாமல் தண்டினை வெட்டி வைப்பதன் மூலமே உற்பத்தி செய்யப்படும் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை நர்சரிகளில் தற்போது கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வாசலிலோ அல்லது கொல்லைப் புறத்திலோ வீட்டிற்கு தேவையானதை நட்டு வைத்து, உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

வேதிப்பொருட்களும் சத்துக்களும்:

இதில்  ஸ்டிக்மாஸ்டீரால், வெடிலோலாக்டோன், எக்லிப்டால், டெஸ்மீத்தைல், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளது. 

தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ இந்த மூன்று சத்துக்களும் இந்த மூலிகையில் அடங்கியுள்ளது. 

இந்த கரிசலாங்கண்ணி மூலிகை தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்று சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தங்கச் சத்து இருப்பதால், ஆறுமாதம் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பொலிவு பெறும்.

(World Health Organization appreciated the importance of medicinal plants for public health care in developing nations. Eclipta alba ( Bhringaraja, Karisalankanni) having important role in the traditional Ayurvedic and Unani systems of holistic health and herbal medicine of the east.

The principal constituents of Eclipta alba are coumestan derivatives like wedololactone[1.6%], demethylwedelolactone, desmethyl-wedelolactone-7glucoside and other constituents are ecliptal, β-amyrin, luteolin-7-O-glucoside, hentriacontanol, heptacosanol, stigmasterol. 

All the parts of Eclipta alba and chemical constituents are used as anticancer, antileprotic, analgesic, antioxidant, antimyotoxic, antihaemorrhagic, antihepatotoxic, antiviral, antibacterial, spasmogenic, hypotensive, ovicidal, promoter for blackening and growth of hair.)

 கரிசாலை தைலம்:

இதோட இலைச்சாறு 70 மி.லி எடுத்து, நல்லெண்ணெய் 700 மி.லி சேர்த்து சிறு தீயாக எரிச்சு பக்குவமா தைலமா காய்ச்சிக்கலாம். அந்த தைலத்த காலையிலும் மாலையிலும் 5 மி.லி சாப்பிட்டு வந்தா இருமல் குணமாகும். கரிசாலை தைலத்த தலைக்கு தேச்சி குளிச்சி வந்தா உடல் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் குறையும், காதுவலி நீங்கும்.

ஜலதோஷம்:

இந்த இலைச்சாற 2 துளி எடுத்து தேன்ல கலந்து கை குழந்தைகளுக்கு கொடுத்தோம்னா, ஜலதோஷம் சரியாகும்.

காதுவலி:

காதுவலி உள்ளவங்களுக்கு இந்த இலைச் சாற்ற விட்டோம்னா வலி தீரும்.

யானைக்கால் நோய்:

கரிசலாங்கண்ணிய நல்லெண்ணெயில அரைச்சி யானைக்கால் நோயுள்ளவங்களுக்கு மேல்பூச்சா பூசலாம்.

சிறுநீரில் இரத்தம்:

சிறுநீரில் இரத்தம் வந்தா இலைச்சாற கால் முதல் அரை ஆழாக்கு தினமும் இருவேளை கொடுக்கலாம்.

தேள் கடி:

இலைய அரைச்சு தேள் கடிச்ச இடத்துல தேச்சு, அதை அப்படியே அங்க கட்டி வச்சா நஞ்சு நீங்கும். இலையை வேக வச்சு ஆவி பிடிச்சா மூல நோய் குணமாகும்."

தலைமுடி கருமையாக வளர கரிசலாங்கண்ணி எண்ணெய் (karisalankanni hair oil in tamil)

கரிசலாங்கண்ணி இலைச்சாற நல்லெண்ணெய், இல்லைனா தேங்காய் எண்ணெயில காய்ச்சி தலைக்கு தேச்சி வர தலைமுடி நல்லா கருமையா வளரும்.

கல்லீரல், மண்ணீரல், தோல் நோய்கள்:

கரிசலாங்கண்ணி வேருக்கும் மருத்துவ குணமிருக்கு. இதோட வேர்ப்பொடிய கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும், தோல் சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தா எடுத்துக்கலாம்."

புண்கள் ஆறுவதற்கு: 

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அதில் வரும் சாரை எடுத்து வெட்டு காயம், ஆறாத புண்கள் இவைகளின் மீது தொடர்ந்து தடவி வர காயங்கள் ஆறும். அந்த தழும்பும் நாளடைவில் மறைந்துவிடும். இது ஒரு கிருமி நாசினியாகும்.

பற்கள் உறுதியாகும்:

கரிசலாங்கண்ணி பொடியை 75% எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, கிராம்பு, மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சை பழம், இந்துப்பு இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து பொடி செய்து, அந்த பொடியில் பல் தேய்த்து வர பல்லில் ஏற்படும் பிரச்சனைகளும் பல்லின் மஞ்சள் தன்மையும் நீக்கப்பட்டு பற்கள் உறுதி ஆக்கப்படும்

நோய் எதிர்ப்பு சக்திக்கு கரிசலாங்கண்ணி இலைகளை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரிசலாங்கண்ணி பொடியுடன் மிளகு ஏலக்காய் தூளையும் சேர்த்து நீரில் கொதிக்கவைத்து மூலிகை தேநீராக பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பருவ காலநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மூச்சுத் திணறல் சரியாகும்:

 நல்லெண்ணெய் 500ml, கரிசலாங்கண்ணிச்சாறு 500ml இவை இரண்டையும் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 2 வேளை ஒரு தேக்கரண்டி உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க: 

எட்டு சொட்டு தேன் உடன் இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணிச் சாற்றை கலந்து குழந்தைகளின் வாயில் தடவினால் அடிக்கடி ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம். 

ஆஸ்துமா குணமடைய: 

கரிசலாங்கண்ணி சூரணத்துடன் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும். பின்பு நான்கு மாதங்கள் கழித்து ஒரு மாதம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயும், சிறுநீரகம் பாதிப்பால் வரும் வெள்ளை வெட்டை நோயும் வராமல் தவிர்க்கலாம். அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு மாதம் என்ற கணக்கில் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

ரத்த சோகை நீங்கும்: 

இந்த கரிசலாங்கண்ணிச் சாற்றை 100ml தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கி விடும். ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு அதிலா சுரக்கும் அமிலத்தன்மை சீராக படும். 

பெண்களுக்கு ரத்தப் போக்கை குறைக்கும்:

 கரிசலாங்கண்ணி சாற்றை தினமும் 30ml சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதனுடன் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இரத்தப்போக்கும் குறையும்.

மஞ்சள் காமாலை: 

கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி அதன் வீக்கத்தையும் இது குறைக்கிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்த இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. கரிசலாங்கண்ணி இலைகளை பறித்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து வடிகட்டி அந்தப் பாலை காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும். உங்கள் வியாதி சரி செய்யப்பட்ட பின்பு, அதிகமான அசைவ சாப்பாட்டை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆறு மாதங்கள் வரை எளிதில் செரிக்கும் உணவினை சாப்பிட வேண்டும்.

*The information given above is a collection of information and you need to cross-check with the naturopathy doctor before taking it.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - (
குறள் 942)
முன் உண்டது செரித்ததைத் தெளியஅறிந்து பின் உண்டால் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை எனச் சொல்கிறது.

அதிகாரத்தலைப்பு 'மருந்து' என்றாலும் மருந்து வேண்டாத வாழ்வையே வற்புறுத்துகின்றார் வள்ளுவர். அதை வெளிப்படையாகவே 'மருந்தென ஒன்று வேண்டாம்' என்று தெளிவுபடுத்துகிறார்.

****You can read this and all other articles in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website.


Share this article link with your friends and relatives if you like it.

**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

By 
Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,” 



"ஒளியாய் ஒளிர்வோம்"


" Let's Shine like a Light "

Comments