சங்ககால மலர்கள் - 99

 

"தமிழ் வழி கல்வி"


சங்ககால மலர்கள்

அனிச்சம்
முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர்.


சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலர்களைப் பற்றிய விளக்கங்களுடன் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் அவை 99 என்னும் பார்வையில் தொகுத்து அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர வேறு இலக்கியங்களில் வரும் மலர்கள் தனித்து அகரவரிசை அடுக்கினைப் பெறுகின்றன.


மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை



குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)

அ வரிசை
1. அடும்பு 87
2. அதிரல் 75
3. அவரை - நெடுங்கொடி அவரை 87
4. அனிச்சம் 62
5. ஆத்தி - அமர் ஆத்தி 87
6. ஆம்பல் 62
7. ஆரம் 93
8. ஆவிரை - விரிமலர் ஆவிரை 71
9. இருள்நாறி - நள்ளிருள் நாறி 94
10. இலவம் 86
11. ஈங்கை 86
12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 65
13. எருவை 68
14. எறுழம் - எரிபுரை எறுழம் 66

க வரிசை
15. கண்ணி - குறு நறுங் கண்ணி 72
16. கரந்தை மலர் 76
17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 68
18. காஞ்சி 84
19. காந்தள் - ஒண்செங் காந்தள் 62
20. காயா - பல்லிணர்க் காயா 70
21. காழ்வை 93
22. குடசம் - வான் பூங் குடசம் 67
23. குரலி - சிறு செங்குரலி 82
24. குரவம் - பல்லிணர்க் குரவம் 69
25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 92
26. குருகிலை (குருகு இலை) 73
27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 95
28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 63
29. குளவி (மலர்) 76
30. குறிஞ்சி 63
31. கூவிரம் 66
32. கூவிளம் 65
33. கைதை 83
34. கொகுடி - நறுந்தண் கொகுடி 81
35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 86
36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 73
37. கோடல் 83

ச வரிசை
38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 75
39. சிந்து (மலர்) 89 (சிந்துவாரம்)
40. சுள்ளி மலர் 66
41. சூரல் 71
42. செங்கோடு (மலர்) 64
43. செம்மல் 82
44. செருந்தி 75
45. செருவிளை 68
46. சேடல் 82

ஞ வரிசை
47. ஞாழல் 81

த வரிசை
48. தணக்கம் (மரம்) - பல்பூந் தணக்கம் 85
49. தளவம் 80
50. தாமரை - முள் தாள் தாமரை 80
51. தாழை மலர் 80
52. திலகம் (மலர்) 74
53. தில்லை (மலர்) - கடி கமழ் கடிமாத் தில்லை 77
54. தும்பை 90
55. துழாஅய் 90
56. தோன்றி (மலர்) - சுடர் பூந் தோன்றி 90

ந வரிசை
57. நந்தி (மலர்) 91
58. நரந்தம் 94
59. நறவம் 91
60. நாகம் (புன்னாக மலர்) 91
61. நாகம் (மலர்) 94
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 79
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 84
64 நள்ளிருணாறி

ப வரிசை
64. பகன்றை 88
65. பசும்பிடி 70
66. பயினி 69
67. பலாசம் 88
68. பாங்கர் (மலர்) 85
69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 74
70. பாரம் (மலர்) 92
71. பாலை (மலர்) 77
72. பிடவம் 78
73. பிண்டி - பல் பூம் பிண்டி 88
74. பித்திகம் 89
75. பீரம் 92
76. புன்னை - கடியிரும் புன்னை 93
77. பூளை - குரீஇப் பூளை 72
78. போங்கம் 74

ம வரிசை
79. மணிச்சிகை 64
80. மராஅம் 85
81. மருதம் 73
82. மா - தேமா 64
83. மாரோடம் - சிறு மாரோடம் 78
84. முல்லை - கல் இவர் முல்லை 77
85. முல்லை 78
86. மௌவல் 81

வ வரிசை
87. வகுளம் 70
88. வஞ்சி 89
89. வடவனம் 67
90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை
91. வள்ளி 79
92. வாகை 67
93. வாரம் 89
94. வாழை 79
95. வானி மலர் 69
96. வெட்சி 63
97. வேங்கை 95
98. வேரல் 71
99. வேரி மலர் 64



பிற இலக்கியங்களில் காணப்படும் பிற மலர்கள்

சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்

வைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள். இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.

புதிய மலர்கள் குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்

ஓங்கல் மலர்[தொடர்பிழந்த இணைப்பு],
 குருகு, 
கூதாளம், 
வெண்கூதாளம், 
பாடலம், 
மயிலை, 
மருதம், 
முசுண்டை, 
வெதிரம் || (விரிமலர்)
 அதிரல், 
குடசம், 
குரவம், 
கோங்கம், 
செண்பகம் = சண்பகம்,
 செருந்தி, 
சேடல், 
தளவம், 
திலகம், 
நாகம், 
(கொழுங்கொடிப்) பகன்றை, 
பிடவம், 
மரவம், 
வகுளம், 
வேங்கை

மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்

மணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.

குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள் குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்

(கொழும்பல்) அசோகம், 
வெதிரம் இலவம் - எரிமலர் இலவம், 
குடசம், 
குரவம், 
குருந்து, 
கொன்றை, 
சண்பகம் – பெருஞ்சண்பகம், 
செருந்தி, 
தளவம், 
தாழை - முடமுள் தாழை, 
திலகம், 
நரந்தம், 
நாகம், 
பிடவம், 
புன்னை - பரந்து அலர் புன்னை, 
மரவம், 
வகுளம், 
வெட்சி - செங்கால் வெட்சி,
வேங்கை

பரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.
1. கணவிரி
2. காந்தள்
3. சண்பகம் (வண்டு அறைஇய சண்பகம்)
4. சுரபுன்னை (கரையன சுரபுன்னை)
5. தோன்றி (காந்தள் தாய தோன்றி தீயென மலரும்)
6. நீலம் மலர் (ஊதை அவிழ்ந்த உடையிதழ் ஒண்ணீலம்)
7. புன்னாகம் (வரையன புன்னாகம்)
8. மாமரம் (தண்பத மனைமாமரம்)
9. வாள்வீரம்
10. வேங்கை (சினைவளர் வேங்கை)

பரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்
பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.

இவற்றில் குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள்

அரவிந்தம்,
அல்லி, 
கழுநீர், 
குல்லை, 
சுரபுன்னை, 
மல்லிகை

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்ட மலர்கள்

ஆம்பல், 
குருக்கத்தி, 
சண்பகம் - மணங்கமழ் சண்பகம், 
நறவம், 
நாகம்- நல்லிணர் நாகம், 
பாதிரி, மௌவல், 
வகுளம்,

மலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்
இளவேனிலில் மலரும் பூக்கள் என்று ஐங்குறுநூறு என்னும் நூலில் சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. – பாடல் எண் 341-357

அதிரல் – ஐங்குறுநூறு 345
எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
காயா, ஐங்குறுநூறு 412
குரவம் - ஐங்குறுநூறு 357
கொன்றை, ஐங்குறுநூறு 412
கோங்கம் – ஐங்குறுநூறு 343
தளவம் ஐங்குறுநூறு 412
நுணவம் – ஐங்குறுநூறு 342
நெய்தல், ஐங்குறுநூறு 412
பலா – ஐங்குறுநூறு 351
பாதிரி – ஐங்குறுநூறு 346
பிடவு ஐங்குறுநூறு 412
புன்கு – ஐங்குறுநூறு 347
மரவம் - ஐங்குறுநூறு 357
மராஅம் – ஐங்குறுநூறு 348
மா – ஐங்குறுநூறு 349
முல்லை ஐங்குறுநூறு 412
வேம்பு - ஐங்குறுநூறு 350

பிறர்
கணவீரம்
பிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.

நாலடியார் நூல் தரும் செய்தி
நீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
நெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்.




Share this article link with your friends and relatives if you like it.


**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இப்படிக்கு,
ச.அ.சன்சனா.

Talents Infinite Talents. ( TIT )
“Be the change you want to see globally,”
OUR
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com

TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1



"ஒளியாய் ஒளிர்வோம்"
" Let's Shine like a Light "

Comments