நோய் தீர்க்கும் மருந்து ஏலக்காய்
"ஆரோக்கிய வாழ்வு"
இந்த தலைப்பில் வாரம் ஒரு சில ஆரோக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்.
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான உடல்நலத்தையும், சிறந்த மனவளத்தையும் தான்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்."
நோய் தீர்க்கும் மருந்து ஏலக்காய் ( Cardamom )
சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1 ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.
2 ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.
3 சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.
4 ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.
5 ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
6 தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.
7 ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
8 ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.
9 நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.
10 ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.
11 வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
12 சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.
13 ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.
14 அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
15 சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.
16 ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.
17 திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.
18 ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.
19 செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
20 வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.
21 வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
22 பக்கவாதம் வராது.
23 ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.
24 அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.
25 குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
26 ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
27 மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.
28 நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும்.
*அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.*
29 வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.
30 விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
31 வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.
You can share this information with your contacts.
*The information given above is a collection of information and you need to cross-check with the naturopathy doctor before taking it.
அற்றது போற்றி உணின் - (குறள் 942)
அதிகாரத்தலைப்பு 'மருந்து' என்றாலும் மருந்து வேண்டாத வாழ்வையே வற்புறுத்துகின்றார் வள்ளுவர். அதை வெளிப்படையாகவே 'மருந்தென ஒன்று வேண்டாம்' என்று தெளிவுபடுத்துகிறார்.
**இந்த கட்டுரையின் இணைப்பை நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
WEBSITE: shorturl.at/dgtY5
YOUTUBE: shorturl.at/jMRZ7
EMAIL : talents.infinite.talents@gmail.com
TO JOIN US / CHAT WITH US: click the below link.
shorturl.at/CMNR1
Comments
Post a Comment