Moral Short Story in Tamil - தமிழில் சிறுகதைகள் - கழுதையின் தந்திரம்
"தமிழ் வழி கல்வி"
**You can read this and all other articles of our website in 108 world languages by clicking the translate options on the left side 3 dots at the home page of our website. (check the bottom page for how to do this screenshots).
Moral Short Story in Tamil
தமிழில் சிறுகதைகள்
கழுதையின் தந்திரம் – Short Stories in Tamil
வியாபாரி ஒருவர் உப்பு வாங்குவ தற்காக கழுதையைக் கடற்கரைக்கு ஓட் டிச் சென்றார். கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு ஓடை இருந்தது.
அந்த வியாபாரி உப்பை வாங்கிக் கழுதையின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அந்த ஓடையைக் கடந்து செல்ல முற்பட்ட போது கால் தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது.
ஓடையில் விழுந்ததால் கழு தையின் மேலிருந்த உப்பு மூட்டையில் இருந்த உப்பில் பாதி அளவு தண்ணீரில் கரைந்து போயிற்று.
ஓடையில் விழுந்தக் கழுதை தட்டுத்தடுமாறி எழுந்த போது மூட்டையின் கனம் மிகவும் குறைந்தது.
வியாபாரி திரும்பிப்போய், இன் னும் கூடுதலாக உப்பைத் தனது கோணி களில் நிரப்பிக் கழுதையின் மேல் பாரத்தை ஏற்றி வைத்து அழைத்து வந் தான்.
ஓடையை நெருங்கியதும் கழுதை வேண்டுமென்றே மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண் டது.
எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதை யின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட் டிச் சென்றான்.
அங்கே உப்புக்கு பதி லாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கி கழுதையின் மேல் பாரத்தை வைத் தான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.
ஆனால் கடற்பஞ்சு தண்ணீர்ரை உறிஞ் சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு மடங்கு பாரத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று.
Moral of Short Story in Tamil – நீதி :தெரிந்தே தவறு செய்யக் கூடாது
Comments
Post a Comment