மனுமுறை கண்ட வாசகம் - இராமலிங்க அடிகளார்
மனுமுறை கண்ட வாசகம் இராமலிங்க அடிகளார் நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ ? வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ ? தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ ? கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ ? மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ ? குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ ? ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ ? தருமம் பாராது தண்டம் செய்தேனோ ? மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ ? உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ ? களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ ? பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ ? ஆசை காட்டி மோசம் செய்தேனோ ? வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ ? வேலையாட்களுக்குக் கூலி குறைத்தேனோ ? பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ ? இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ ? கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ ? நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ ? கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ ? கற்பிழந்தவளைக் களித்திருந்தேனோ ? காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ ? கணவன் வழிநிற்போரைக் கற்பழித்தேனோ ? கர்ப்பம் அழித்துக் களித்திருந்தேனோ ? குருவை வணங்கக் கூசி நின்றேனோ ? குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ ? கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ ? பெ...